திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல குளறுபடிகள் ஏற்பட்டிருந்த நிலையில் பரீட்சை பெறபேறுகள் வெளியிடப்படடுள்ளன.
இதன் பின், உச்ச நீதிமன்ற ஆணையை தொடர்ந்து கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட பட்டியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.