வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156-ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலச்சரிவில் சிக்கி இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.