”ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவர் முன்னிலையாவார் என்றும் அவர் மொட்டுசின்னத்திலேயே போட்டியிடுவார் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
தேர்தலில் எந்தவித இடையூறும் இன்றி வெற்றி பெறுவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார். அதற்காகவே பல விதமான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டுவருகின்றார்.
தேர்தலில் தாம் வெற்றி பெறுவது உறுதியென்றால் அவர் தேர்தலை பிற்போடும் சதி முயற்சிகளில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுவதனாலேயே தேர்தலை பிற்போடும் முயற்சிகளை மறைமுகமாக மேற்கொண்டு வருகின்றார்” இவ்வாறு ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.