மதுபான போத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான உற்பத்தியாளர்களுடன் கலால் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை 600 – 700 ரூபாவிற்கு இடையில் குறைந்துள்ளதால் மதுபானத்தின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பு காரணமாக மதுபானத்தின் விற்பனையில் 40% குறைந்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபானத்தை பாவிக்கும் பாவனையாளர்களின் தூண்டுதல் அதிகரித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.