எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனிநபர் அல்லது கட்சிசார்பாக தீர்மானம் மேற்கொள்வதை விடுத்து நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
பொதுஜன பெரமுன கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கு நாம் ஆரம்பித்தில் இருந்தே எதிர்ப்பினை தெரிவித்திருந்தோம்.
பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்திற்கு ஆரம்பத்திலேயே 11 உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுத்து முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இன்று அதில் வெற்றிகண்ட ஒரே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.
அதனாலேயே நாம் தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். நாம் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்படவில்லை.
நாடு தொடர்பாக சிந்தித்து மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுடன் இணங்கி செயற்பட வேண்டும்.நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவருக்கு ஆதரவு வழங்கவதே பொருத்தமான தீர்மானமாகும்.
அதாவது தனிநபர் அல்லது கட்சிசார்பாக தீர்மானம் மேற்கொள்வதை விடுத்து நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே நாடு வீழ்ச்சிப்பாதைக்கு செல்வதை தடுக்க முடியும்” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தொிவித்தாா்.