பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தொிவித்துள்ளாா்.
தேசிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றின் பின்னா் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உள்ளனர்.
இவ்வாறானவர்கள் ஒன்றிணையும் போது இந்த நாட்டில் ஊழல் ஆட்சிக்கே வழிவகுக்கப்படும்.
பொருளாதார வங்குரோத்துக்கு பதில் கூற வேண்டியவர்கள் இன்று நாட்டில் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.
எனவே இந்த நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைப்பற்கு மக்கள் தயாராகியுள்ளனர்.எதிர்வரும் 50 நாட்களுக்குள் இந்த நாட்டில் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.
நாட்டில் ஊழல்வாதிகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றிணைந்துள்ளனா்.
மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள்.தேசிய மக்கள் சக்தி மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பிய ஒருமக்கள் படையணியாகும்” என நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தொிவித்தாா்.