அரசு பாடசாலைகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 க்கு கோவையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கோவை அரச கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி அரச பாடசாலைகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.