பங்களாதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதன்படி பங்களாதேஷை விரைவாக மீட்டெடுப்பதும் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம் என இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இரு தரப்பினரின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற பங்களாதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்