கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
வயநாட்டில் கடந்த 30 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.