இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் அடுத்த 03 மாதங்களில் கட்டம் கட்டமாக 3,000 மெற்றிக் தொன் பச்சை இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டு யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு” இஞ்சி உற்பத்திக்கான வசதிகளை வழங்கி உள்நாட்டுச் சந்தையில் நுகர்வோரின் தாங்குதிறன் மட்டத்தில் இஞ்சியின் சில்லறை விலையைக் குறைப்பதற்கான விலைமட்டத்தை ஆராய்ந்து பார்த்து, அதுதொடர்பாக பொருத்தமான விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் விதந்துரைகளின் அடிப்படையில், அடுத்துவரும் மூன்றுமாத காலப்பகுதிக்குள் 3000 மெற்றிக்தொன் பச்சை இஞ்சியை இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்காக விவசாய, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக,வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.