தரம் 8 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை இரண்டு ஆண்டுகளாகக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 5 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
களுத்துறை, ஹொரண ரெமுண பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், களுத்துறை, தியகம பிரதேசத்தில் வசிக்கும் மூவரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க உதவிய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் சிறுமி, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வருவதும், வீட்டின் வறுமை காரணமாக, பணம் மற்றும் பிற பொருட்களை கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.