ஐரோப்பா கண்டத்தில் வெயில் காரணமாக கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அதன்படி ஐரோப்பா கண்டத்தில் உள்ள 35நாடுகளில் 823 பகுதிகளில் பதிவான வெப்ப அளவு, உயிரிழப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டுள்ளது
இன்னிலையில் அதிகபட்சமாக கிரீஸ் நாட்டில் உயிரிழப்பு விகிதம் 10 லட்சம் பேருக்கு 393 என்ற அளவில் உள்ளதுடன் அதற்கு அடுத்த இடங்களில் பல்கேரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.
ஜூலை மாதம் வீசிய வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் வசித்தவர்களில் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டர் என்றும் ஒகஸ்ட் பிற்பகுதி வரை வீசிய வெப்ப அலையில் தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த ஆய்வுவில் குறிப்பிடப்பட்டுள்ளது