”பொருளாதார ரீதியாக நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது இலக்கு” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சஜித் பிரேமதாஸ, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அனைத்து விடயங்களும் தற்போது இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்.
ஆனால், உண்மையில் என்ன நடந்துள்ளது? பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது.
வறுமை தலைத்தூக்கியுள்ளது. வாழ்வாதாரத்திற்கான வழிகள் இல்லாமல் போயுள்ளன.
சேமிப்புக்கோ முதலீட்டுக்கோ வழிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். மக்களின் பொருளாதாரத்தை சுறுக்கும் பொருளாதாரக் கொள்ளை தான் இன்று நாட்டில் பின்பற்றப்படுகிறது.
இப்படி செய்தால் இயல்பு நிலையில் நாடு வந்துவிட்டது என்று அறிவிக்கலாம்தானே.
நாம் இந்த நிலைமையை மாற்றியமைத்து புதியதொரு நாட்டைதான் மக்களுக்கு வழங்க வேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.