லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து நடாத்திய பிரதான 7 விளையாட்டு போட்டிகளை உள்ளடக்கிய ஸ்போர்ட் பியஸ்டா மாபெரும் விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது
ஸ்போர்ட் பியஸ்டா மாபெரும் விளையாட்டு விழா கொழும்பு குதிரைத்திடலில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பூரண அனுசரணையடன் ஆரம்பமான இந்த மாபெரும் காற்பந்து விளையாட்டு போட்டி லைக்கா ஞானம் செலேன்ஞ் ட்ரொபி என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்துடன் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து தேசிய ரீதியில் தெற்காசியாவில் மூன்று நாட்களுக்கு ஏழு விளையாட்டுபோட்டிகளை உள்ளடக்கி இந்த மாபெரும் விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
24 மாவட்ட அணிகளில் நாட்டின் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் மகளிர் மற்றும் ஆடவர் வீரவீராங்கனைகளை உள்ளடக்கிய குழுக்கள் இந்த மாபெரும் போட்டித்தொடரில் பங்கேற்றிருந்தன.
கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற குறித்த போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்று வெற்றிகரமாக இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் 3:1 கோல்கள் வித்தியாசத்தில் பெனடிக்ட் அணியை வீழ்த்தி மீட் அல்_சைனியா மாபெரும் இறுதிப்போட்டியில் பெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
இதனிடையே மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டியில் கடற்படை மகளிர் அணியை 1:0 அடிப்படையில் வீழ்த்தி ரினோவ்ன் அணி வெற்றிபெற்றது.
அத்துடன் ஆடவர்களுக்கான போட்டியில் நியூ ஸ்டார் அணியை வீழ்த்தி ரினோவ்ன் அணி வெற்றிபெற்றது.
எதிர்வரும் சில மாதங்களில் இடம்பெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்து விளையாட்டு போட்டியின் முன்னோடி போட்டியாகவே லைக்கா ~ ஞானம் செலேன்ஞ் ட்ரொபி கிண்ணத்தொடர் இடம்பெற்றது.
லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை காற்பந்துசம்மேளனத்துடன் இணைந்து நாட்டின் காற்பந்து துறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டித்தொடர் ஒன்றை நடத்துவதற்கு கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்தது.
ஆசியப்பிராந்தியத்தில் காற்பந்துதுறையினை உயர்தரத்தில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் ஊடாக லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அனைத்து சமூகத்தினருக்கும் காற்ப்நது விளையாட்டை நீண்ட காலத்திற்கு ஊக்குவிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய ரீதியாக வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.