ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேலிலிருந்து 251 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
எனினும் ஒப்பந்த அடிப்படையில் 105 பணயக் கைதிகளை இஸ்ரேல் மீட்டதுடன், மேலும் மீட்பு நடவடிக்கை மூலம் 8 பணயக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் 110 இக்கும் மேற்பட்டோர் இன்னும் பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது