ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், கொள்கைப் பிரகடனம் தொடர்பில் கண்டியில் செய்தியாளர் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த விஞ்ஞாபனம் ஆனது “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழி” என அவர்களின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்படவுள்ளது
இதேவேளை, விவசாயிகளுக்கு அதிகூடிய நிவாரணங்களை வழங்கி வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.