மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என நாங்கள் அன்று மக்களுக்கு தெளிவுபடுத்தினோம். என்றாலும் மக்கள் எங்களை நம்பாததால் பாரிய நெருக்கடிக்கு எங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவுக்கே முன்வரவேண்டி வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு முடியுமான தலைவரை தெரிவு செய்வதா? அல்லது புதிய ஒருவரை தெரிவுசெய்து பரீட்சித்துப்பார்ப்பதா? என்பது மக்களின் தீர்மானத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களிக்கும்போது, நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும்,ஆனால் மக்கள் அன்று எங்களை நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்றே எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அதனால் மக்கள் இந்த தேர்தலை விளையாட்டாக கருதாமல் சரியான தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவ்வாறு இல்லாவிட்டால், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷிற்;கு ஏற்பட்டுள்ள நிலையே எமது நாட்டுக்கும் ஏற்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.