கிழக்கு சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையின் வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி உள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பாடசாலை மாணவர்களும், 6 பெற்றோரும் உள்ளடங்குகின்றனர். மேலும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.