ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று 921வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் புட்டின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புட்டின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புட்டினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நிலையில் புட்டினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அந்நாட்டு அதிபர் உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.