ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
6.61 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 59 வயதுடைய நபருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, கல்கிஸ்ஸ படோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 6.61 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.