சஜித்துடன் சேர்ந்து அமைச்சா் பதவியைப் பெற்று நிம்மதியாக வழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தொிவித்தாா்.
பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”உலகில் எந்த நாடும் இவ்வாறு ஒன்றரை வருடத்தில் மீண்டது கிடையாது. அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார்.
வங்குரோத்தடைந்த நாடென்று நினைத்து வந்தேன். ஆனால் அதிசயக்கும் வகையில் அனைத்தும் மாறி வழமை நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் எதிரணியினர் ரணிலை பகிரங்கமாக விமர்சிக்கின்றனர். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி சஜித்துடன் சேர்ந்து அமைச்சரவை பதவி பெற்று நிம்மதியாக இருந்திருக்கலாம்.
ஆனால் நாட்டை மீட்கவே அனைத்தையும் விட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக வெளியில் வந்துள்ளேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தொிவித்தாா்.