உணவு விஷமானதால் தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 20-40 வயதுக்கு இடைப்பட்ட 25 பெண்களும் 18 ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.