புரூனேவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 40 வருடகால தூதரக உறவை கொண்டாடும் விதமாக புரூனேவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை சிங்கப்பூர் செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.