இலங்கையில் உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.