ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரக் காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து 500 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் அமைப்பின் இலங்கைக்கான நிறைவேற்று பணிப்பாளர் நதிசானி பெரேரா தெரிவித்துள்ளார்.
300 முறைப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காக பொதுச்சொத்துக்களை பயன்படுத்துபவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவது குறித்து மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 2095 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேசிய தேர்தல்முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 811 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டுமுகாமைத்துவ மத்தியநிலையத்தில் 1284 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.