ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் எதிர்கால பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 என்ற புதிய திட்ட வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த வரைபு நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டது. இதில் சிறப்புக் கருத்துரையாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். அத்துடன் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு குறித்து இங்கு தெளிவூட்டப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் Economic Blueprint பொருளாதார திட்டம் மற்றும் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கொள்கை பிரகடனம் என்பனவும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.