“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதத்தில் தமது தேர்தல் கொள்கைகளை முன்வைத்த போதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள திலித் ஜயவீர கூறியுள்ளார்.
சில வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் புத்தகங்களை வௌியிட்டுள்ளதாகவும், அதில் மக்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வாக்கியம் கூட இல்லை எனவும் எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் போராட்டத்தின் பின்னர் அனைவரும் ஓடிவிட்டதால் தான் வந்ததாக கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கேஸ் விலையை 4 மடங்கு உயர்த்தினார் எனவும் திலித் ஜயவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.