மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழ மண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழர்கள் மற்றும் அதற்கு முந்தைய கால தமிழர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாக கருதப்படும் பகுதிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இடங்களில் தொல்லியல் தொடர்பான கள ஆய்வு பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பானை, ஓட்டுத் தண்டுகள், சட்டி, கல் இரும்புத் தாது பெறக் கூடிய கற்கள் போன்ற பல சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதோடு, அவை மேலதிக ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலாளர் கனகேஸ்வரனின் ஒழுங்கமைப்பிலும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஸ்ரீஸ்கந்த குமாரின் தலைமையிலும் நடைபெற்ற இந்த அகழ்வுப் பணியல் மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.