கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையத்தை இன்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 2040 லீற்றர் கோடாவும் பொலிஸாரினால் அழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோத மதுபான உற்பத்தி மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.