2024 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிலேயே இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ” ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதி மீறல் செயற்பாடுகள் பல இடங்களில் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
துண்டுப் பிரசுரங்களை பேரணியாக சென்று விநியோகம் செய்ய முடியாது. 5 பேருக்கு உட்பட்டோர் மட்டும்தான் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க முடியும்.
பேரணி செல்வதாயின் பொலிஸாரின் அனுமதி கட்டாயமாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.