கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களினால் நாட்டுக்கு அனுப்பட்ட பணம் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களினால் மொத்தம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டிற்கு 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, உத்தியோகபூர்வ பணம் அனுப்பும் முறைகளைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகன கொள்வனவில் குறைந்த வட்டி கடன் போன்ற சலுகைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.