சர்வதேச சந்தையில் அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 2% ஆல் அதிகரித்துள்ளது.
மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட ஃபிரான்சைன் சூறாவளி மற்றும் லூசியானா மண்சரிவுகள் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைத்த காரணத்தினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமலாக்கப் பணியகத்தின் கூற்றுப்படி, மெக்சிகோ வளைகுடாவில் ஒரு நாளைக்கு 7,30,000 பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வியாழக்கிழமை காணப்பட்ட பிரதான எண்ணெய் விலை விபரம்:
அமெரிக்க மசகு எண்ணெய் – 68.97 டொலர்கள்
பிரண்ட் மசகு எண்ணெய் – 71.97 டொலர்கள்