அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (13) சற்று குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நேற்று 296.41 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 296.45 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நேற்று 305.69 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 305.77 ரூபாவாக உயர்ந்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கு உட்பட பல வெளிநாட்டு நாயணங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.