எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்குபதிவின்போது, வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படுகின்ற அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு அபராதத் தொகைக்கு மேலதிகமாக ஒரு வருடத்திற்கும் மேற்படாத விளக்கமறியல் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நேற்றுவரை பதிவான மொத்த தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4215 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 184 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த முறைப்பாடுகளில் 3641க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 574 முறைப்பாடுகள் தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.