யாழில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூவர் தவறான முடிவினை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியொருவரும், பெரியவிளான் பகுதியை சேர்ந்த 13வயதான சிறுவனொருவனும், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞரொருவருமே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மூவரின் மரணத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.