லெபனானில் வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டாவது நாளாக பதிவான வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்
மேலும், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த நிலையில், அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது
மேலும் லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
அத்துடன் ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது