பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை விமானங்களில் கொண்டு வருவதற்கு கட்டார் ஏர்வேஸ் தடை விதித்துள்ளது.
லெபனானில் பல வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் வெடித்ததை அடுத்து, விமானங்களில் இதுபோன்ற விடயங்களைத் தடைசெய்யும் உத்தரவை நாடு பிறப்பித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, விமான நிறுவனம், சமூக ஊடக தளமான எக்ஸில், மறு அறிவிப்பு வரும் வரை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்று கூறியது.
செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் லெபனான் முழுவதும் பதின பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் 2,931 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் நிலவி வரும் நிலையில் குறித்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.