நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 13421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன் முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன.
22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.