ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புதிய அமைச்சரவை இன்று (24) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது.
இன்று பிற்பகல் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட உள்ளதாகவும் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் படையில் தற்போது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், 15 அமைச்சுக்கள் நான்கு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதன் பின்னர் இன்று (24) இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அக்கட்சியின் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.