இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான முதல் வேலை நாளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று அதிகரித்தது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று (24) முறையே 299.71 ரூபாவாகவும், 309.08 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 299.94 ரூபாவகவும் 309.23 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.