தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய தகவல்களுக்கு அமைய இலங்கையின் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது.
2024 ஜூலை மாதம் 2.5% ஆக இருந்த இலங்கையின் பிரதான பண வீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1% ஆகக் குறைந்துள்ளது.
ஜூலையில் 2.9% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஆகஸ்ட்டில் 2.3% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும், 2024 ஜூலையில் 2.2% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஆகஸ்ட்டில் 0.2% ஆகக் குறைந்துள்ளது.