உலகளவில் தீவிரமாகப் பரவி வரும் ‘Mpox Clade 1b‘ குரங்கு அம்மை தொற்றானது தற்போது இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான நபரொருவருக்கே குறித்த தொற்று முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பியவர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருடன் தொடர்புடைய சுமார் 29 நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் விமானத்தில் பயணித்த 37 பயணிகள் தற்போது வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் அவர்களில் யாருக்கும் இதுவரை குரங்கம்மை தொற்று தொடர்பான அறிகுறிகள் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.