நாம் வாழும் பூமி கிரகமானது இரண்டாவது சந்திரனைப் ஒரு குறுகிய காலத்துக்கு பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரையான காலத்திற்கு ‘மினி நிலவு’ என்று அழைக்கப்படும் இந்த சிறு கோள் நமது கிரகத்தைச் சுற்றி வரும் என மாட்ரிட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“2024 PT5” என்று பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறை சூரியனைச் சுற்றி அதன் இயல்பான பாதையில் பயணித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அது பூமியின் ஈர்ப்பு சுற்றுப்பாதையில் தற்காலிகமாக இழுக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுமார் 33 அடி நீளமுள்ள இது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
சில விஞ்ஞானிகள் 2024 PT5 ஐ “மினி நிலவு” என்று விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.