ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரிமையில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 தொடக்கம் ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் தேர்தலுக்கு பின்னர், புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி கூடும் என்றும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.