பங்களாதேஷ் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸ் செவ்வாயன்று (24) நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்திற்கு பைடன் அமெரிக்காவின் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மொஹமட் யூனுஸ் இ பங்களாதேஷை மீண்டும் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பைக் இதன்போது கோரினார்.
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உட்பட பல தலைவர்களையும் யூனுஸ் ஐ.நா. அமர்வில் சந்தித்தார்.