இலங்கை மத்திய வங்கி துணை நில் வைப்பு வசதி வீதம் (Standing Deposit Facility Rate) மற்றும் துணைநில் கடன் வசதி வீதம் ( Standing Lending Facility Rate )ஆகியவற்றை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முறையே அவை 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் ஆக இருக்கும். இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபைக் கூட்டம் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.