சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
சவுதி தனது அதிகாரப்பூர்வமற்ற எண்ணெய் விலை இலக்கான பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கை கைவிடத் தயாராக உள்ளது என்று இராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கொள்காட்டி தி பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.
இதன்படி, சவுதி அரேபிய அதிகாரிகள் டிசம்பரில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளனர், இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு எண்ணெய் விலை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.