இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியல் 39,137 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை 16,463 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 9768 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.