எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்கிகளால் வழங்கப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஏனைய நபர்களுக்கு பகிர வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிநபர்கள் OTPகளை பிற நபர்களுக்கு பகிர்வதால் பல்வேறு பட்ட நிதி மோசடிகள் இடம்பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வங்கிகள் OTP களை பிற நபர்களுக்கு பகிராது, பொதுமக்கள் தங்கள் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.