முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்டோரும் இதில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.